மேத்யூஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துளியும் உண்மை இல்லை

Jan 12, 2019 01:24 PM 543

2017ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற சம்பவத்தில், தன்னை தொடர்புபடுத்தி தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், துளியும் உண்மை இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேத்யூஸ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், மேத்யூஸ் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் காட்சிகள் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும்போதெல்லாம் வழக்கு தொடுப்பது திமுகவின் வேலை என முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted

Super User

ஆமாம்