கே.ஆர்.பி அணையின் உபரிநீர் வெளியேற்றத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Oct 09, 2019 12:16 PM 155

கே.ஆர்.பி அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 52 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.பி அணையில் 42 அடி வரை நீர்தேக்கம் செய்யப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 2 ஆயிரத்து 47 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி அணை அருகே உள்ள தரைப்பாலத்தின் மீது வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால், அணைக்கு செல்லக்கூடிய முதல் வாயில் அடைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted