கேரளா அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Jan 03, 2019 07:10 AM 246

சபரிமலையில் தரிசனம் செய்ய பெண்களை அனுமதித்த கேரளா அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டத்தை மீறி கேரள கம்யூனிஸ்ட் அரசு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். இரண்டு பெண்களை மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருப்பது அப்பட்டமான சூழ்ச்சி என்றும் விமர்சித்தார்.

Comment

Successfully posted