குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் தமிழகம் 3ஆவது இடம்: அமைச்சர் சி.வி.சண்முகம்

Dec 02, 2019 07:00 PM 352

தேசிய அளவில் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்...

சென்னைத் தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் குற்ற வழக்குகள் தொடர்வு துறையின் மாநில அளவிலான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், தேசிய அளவில் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் முதலிடத்தைப் பெற அரசு வழக்கறிஞர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அரசு வழக்கறிஞர்களின் சங்கத்தின் சார்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கோரிக்கை மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதியளித்தார்.

Comment

Successfully posted

Super User

Congratulations