சொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்

Nov 20, 2019 09:51 AM 162

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே, சொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் தடுத்து நிறுத்தி, திமுகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக மூன்று குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த அப்துல் ரஷித், பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தில், வீடு கட்டி வருகிறார். இதனை தடுத்து நிறுத்திய திமுக நிர்வாகி சிவாஜி உள்ளிட்டோர், வீடு கட்டக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதேபோல், அதே கிராமத்தை சேர்ந்த செல்வம், பாரதி ஆகியோரும் தங்களது இடத்தில் வீடு கட்ட முயன்ற போது, அதனை திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திமுகவினரின் அராஜகத்தால் செய்வது அறியாது, அவர்கள் தவித்து வருகின்றனர்.

Comment

Successfully posted