ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - சந்திரபாபு நாயுடு கடிதம்

Apr 11, 2019 03:42 PM 302

ஆந்திராவின் ஒரு சில தொகுதிகளில் மறுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. நூற்றுக் கணக்கான தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயங்காததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. ஒருசில இடங்களில் அரசியல் கட்சியினர் வாக்குப் பதிவு மையங்களில் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு வராத நிலையே உள்ளது. இந்நிலையில், காலை 9.30 மணி வரை வாக்குப் பதிவு தொடங்காத மையங்களில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

Comment

Successfully posted