புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்சை யு மும்பா அணி வீழ்த்தியது

Oct 18, 2018 05:56 AM 577


புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்சை  42 -32 என்ற கணக்கில் யு மும்பா அணி வீழ்த்தியது.


புரோ கபடி லீக் 2018 போட்டியின் ஒரு பகுதியாக, நேற்று இரவு ஹரியானா மாநிலம் சோனிபட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், சுதாரித்துக் கொண்ட யு மும்பா அணியினர் முதல் பாதியில் 24 -13 என்ற புள்ளியில் முன்னிலை வகித்தனர்.

யு மும்பா அணியின் சித்தார்த் தேசய் 15 ரெய்டு பாய்ண்ட் எடுத்தார். இதனால் யு மும்பா அணி 42 -32 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் யு மும்பா அணி 3 வெற்றிகளையும், ஹரியானா அணி 5 தோல்விகளையும் சந்தித்துள்ளன.

 

Comment

Successfully posted