30 -ம் தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Nov 27, 2018 08:22 AM 230

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் தொடர்வதால், 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சபரிமலையில் வன்முறை சம்பவங்களும், போராட்டங்களும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

இதை கட்டுப்படுத்த சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு கடும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரவை அமல்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதனிடையே, சபரிமலையில், அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இந்நிலையில்,இந்த தடை உத்தரவு வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

Comment

Successfully posted

Super User

இதற்க நிரந்தர ஓர் தீர்வு கோவில் விதி அரசு மற்றும் நீதி மன்றம் தலையிட கூடாது என்று சட்டம் திருத்த கொண்டு வர வேண்டும்....கோவில் புனித காக்க வேண்டும்...இந்துக்கள் மரபுவழி வழிய முறை யாரும் கொச்ச படுத தேவை இல்லை.200 ஆண்டு வழிய முறை எங்கள் மற்ற முடியாது..