கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ

Jan 24, 2020 08:05 PM 869

கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உணரப்படுகிறது.  விவசாய நிலங்களுக்கு படை எடுக்கும் வெட்டுக்கிளிகள் பயிர்களை அழித்து கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன. இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் பாஜக எம் எல் ஏ  பிஹாரி சிங் கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு உடனடியாக விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

Comment

Successfully posted