ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஓரிரு நாளில் விசாரணை: தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

Nov 18, 2019 01:20 PM 127

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது, நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் கடந்த 90 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அடுத்தடுத்து அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் புதிய தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அமர்வு முன்பு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, நாளை அல்லது நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

Comment

Successfully posted