சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது

Feb 17, 2020 06:49 AM 201

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி உட்பட 5 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ரெங்கபாளையத்தில் 2 சிறுமிகளை, அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கடந்த 2 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் தங்களது செயல் குறித்து பெற்றோர்களிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும், அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மற்றோரு 7 வயது சிறுவனுக்கும் பாலியல் ரீதியில் ஐவரும் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுவன், தனக்கும், சிறுமிகளுக்கும் நேர்ந்த துயரத்தை தனது பெற்றோரிடம் கூறினான்.

இந்நிலையில், சிறுவன் மற்றும் சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், வத்திராயிருப்பு காவல்துறையினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் அவரது கூட்டாளிகள் கணேஷன், இரணவீரன், ராதாகிருஷ்ணன், திருவன் ஆகிய 5  பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 5 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted