மீனவர் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம்

Dec 19, 2019 09:55 PM 1066

கடலூர் அருகே, கடல் பகுதியில் விழுந்த பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் ஒன்று மீனவர் வலையில் சிக்கியது.

கடலூர் மாவட்டம் தாழங்குடாவிலிருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் பிரமோஸ் ஏவுகணையின் உதிரிபாகம் ஒன்று, மீனவர் அறிவரசனின் வலையில் சிக்கியது. வலையில் சிக்கிய ஏவுகணை 2017-2018 ஆகிய ஆண்டுகளில் ஏவப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உருளை வடிவிலான இந்த ஏவுகணையின் உதிரிபாகம் சுமார் 60 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் வலையில் சிக்கிய ஏவுகணையின் உதிரி பாகத்தை அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு பார்த்து செல்கின்றனர். இதனையடுத்து, கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஏவுகணையின் உதிரிபாகம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted