அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும்

Mar 14, 2019 05:40 PM 141

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால், தங்களது உடல்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பழச்சாறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted