திருமண மண்டபங்களில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்தினால் முன்னரே அறிவிக்க வேண்டும்

Mar 14, 2019 08:10 AM 61

திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கூடங்களின் உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளின் சார்பில் கூட்டம் நடத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருமண மண்டபம் மற்றும் அச்சுக்கூடங்களின் உரிமையாளர்களுடன் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கூடங்களின் உரிமையாளர்கள் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சார்பில் கூட்டம் நடத்தினால், அத்தகவலை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கதிரவன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், பட்டியல் தொகை தகவலையும் அளிக்க வேண்டும் எனவும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த நபர்களுக்கு திருமண மண்டபம் மற்றும் தனியார் கூடங்களில் தங்க அனுமதி வழங்க கூடாது எனவும் கூறப்பட்டது.

Comment

Successfully posted