விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்த திமுக வேட்பாளர்கள்

Dec 27, 2019 04:48 PM 507

மதுரையில் திமுகவினர் விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்ததால் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒத்தகடை தொடக்கப்பள்ளி மற்றும் பெண்கள் பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில், திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களிடத்தில் வாக்கு சேகரிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது. இது குறித்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் காவல்துறையினரிடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் வாக்குச்சாவடியின் கதவை இழுத்து மூடியதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் வினய், விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

Comment

Successfully posted