காதலர் தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தடுக்க காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு

Feb 14, 2020 08:13 AM 313

இன்று காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள மக்கள் கூடும் இடங்களான  கடற்கரைப் பகுதிகள், பூங்காக்கள், தனியார் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் காதலர்களின் வருகை அதிகளவில் இருக்கும் என காவல்துறையினரால் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதே சமயம் காதலர் தின கொண்டாட்டங்கள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் வகையில் உள்ளதால் சில அமைப்புகள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு  போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.  எனவே, அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்க சென்னையில் உள்ள பொழுதுபோக்கு இடங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் காவல்துறைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted