உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலை பயன்பாடு அதிகரிப்பு

Jan 11, 2019 11:17 AM 87

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வாழை இலை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக உணவகங்களில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக வாழை இலை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், வாழை இலைகளின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து, அதன் விலையும் உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, குளச்சல் மற்றும் சுற்றுவட்டார சந்தைகளில் 40 ரூபாய்க்கு விற்பனையான ஒருக்கட்டு வாழை இலைகள், தற்போது 200 முதல் 300வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted