பவானிசாகர் அணைப் பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

Jun 16, 2019 01:18 PM 66

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் தற்போது சேமிப்பில் இருப்பதால், கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. 147 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது ஆயிரத்து 385 அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.99 அடியாகவும், நீர் இருப்பு 5.7 டிஎம்சியாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி அணையில் 5 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted