சீனாவில் கொரோனா வைரஸால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Feb 13, 2020 08:57 AM 397

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வூகான், ஹூபே ஆகிய நகரங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் 14 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Comment

Successfully posted