சுதந்திர தினத்திற்கான அணிவகுப்பு ஒத்திகை

Aug 11, 2018 03:55 PM 393

72வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொண்டாப்பட உள்ளது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வார். இதற்காக காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.  ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, கமான்டோ படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவை சார்ந்த காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 1மணி நேரம் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது .

Comment

Successfully posted