இந்தியாவின் நவீன ஏவுகணை சோதனை வெற்றி

Sep 12, 2019 06:19 AM 191

எதிரி நாட்டு ராணுவ பீரங்கிகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற ஏவுகணை சோதனையில் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையை ராணுவ வீரர்கள் எளிதாக கையாலளாம் எனவும், இதன் மூலம் இந்திய ராணுவத்தின் பலம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனையை வெற்றிபெற செய்த இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted