சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் -இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வென்று அசத்தியுள்ளார்

Oct 12, 2018 11:35 AM 539

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

இளையோர் ஒலிம்பிக் திருவிழா அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் (buenos aires) நகரில் கடந்த 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்தியாவின் சார்பில் 13 விளையாட்டு பிரிவுகளில் 47 வீரர் விரங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் 16 வயதான சவுரப் சவுத்ரி 244. 2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி மற்றும் உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏற்கனவே இரண்டு தங்கம் வென்றுள்ள நிலையில், தற்போது 3 தங்கம், 3 வெள்ளி, உட்பட 6 பதக்கங்களை பெற்று 7 வது இடத்தில் உள்ளது. பதக்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Comment

Successfully posted