நாட்டின் ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு - மத்திய வர்த்தக துறை அமைச்சகம்

Feb 17, 2020 07:05 AM 428

நாட்டின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 1.66 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 1.66 சதவீதமாக குறைந்து  1 புள்ளி 84 லட்சம் கோடி ரூபாயாக  உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாட்டின் இறக்குமதியும் 0 புள்ளி 75 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2 புள்ளி 92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி  மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறுக்குமதி சரிவை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted