ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

Aug 20, 2018 11:03 AM 608

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவிலும், பலம்பாங் நகரிலும் நடைபெற்று வருகிறது. கடந்த 18ஆம் தேதி, தொடங்கிய போட்டிகள், செப்டம்பர் 2ஆம் வரை நடைபெறுகிறது. மல்யுத்த இறுதிப் போட்டியில் பஜ்ரங் புனியா, ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியையுடன் மோதினார். அப்போது, 11 க்கு 8 என்ற கணக்கில் தைசி டகாடனியை வீழ்த்தி, பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்தியா முதல் தங்கப் பதக்கம் பெற்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில், கலப்புப் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா - ரவிக்குமார் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

 

 

Comment

Successfully posted