இந்தியா, சீனா, ரஷியா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் ஒத்திவைப்பு!

Jun 18, 2020 12:46 PM 292

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையேயான மோதலை தொடர்ந்து, ரஷ்யாவுடன் இந்தியா, சீனா கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில், லடாக்கின் கல்வான் பகுதியில், இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நேரிட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், ரஷ்யா - இந்தியா - சீனா கலந்து கொள்ளவிருந்த ஆர்.ஐ.சி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 22, 23ம் தேதியில், மூன்று நாடுகளை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted