12-ம் தேதி இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

Oct 04, 2020 04:16 PM 650

கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பதற்றத்தை குறைப்பதற்காக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.


அசல் கட்டுப்பாட்டு எல்லையில் பதற்றத்தை குறைக்கவும், படையினரை முழுமையாக திரும்பப் பெறவும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் 21ஆம் தேதி, மோல்டோ பகுதியில் நடந்த 6ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், பிரச்னைகளை பேசித் தீர்த்து, எல்லையில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

பாங்கோங் ஏரி, டெப்சாங் ஆகிய இடங்களுக்கு மேலும் படைகளை அனுப்பக் கூடாது என்றும் சீனாவை இந்தியா எச்சரித்தது. இந்நிலையில், எல்லைப் பதற்றத்தை குறைப்பதற்காக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், ராணுவ படைகளை முழுவதுமாக வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted