இந்தியா, ஜெர்மன் இடையே 20 உடன்படிக்கைகள் கையொப்பம்

Nov 01, 2019 03:23 PM 208

இந்தியப் பிரதமர் மோடி- ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே நடைபெற்ற பேச்சின் முடிவில் இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 20 உடன்படிக்கைகள் கையொப்பமாகியுள்ளன.

இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சின் முடிவில் இருநாடுகளிடையே வணிகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக 20 உடன்படிக்கைகள் கையொப்பமாகின. அதன்பின் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

Comment

Successfully posted