இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி

Aug 01, 2018 01:06 PM 1194

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி வென்றது. இந்தநிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.  டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரில் தோல்வியடைந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணி வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை வென்ற உற்சாகத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் களமிறங்குவார்கள் என்பதால் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக அமையும் என தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி, ஆயிரமாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.  

Comment

Successfully posted