இந்தியா - சவுதி அரேபியா இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Feb 20, 2019 02:33 PM 336

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் மோடி வரவேற்றார். இந்தநிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில், முகமது பின் சல்மானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு, கூட்டு ராணுவப் பயிற்சி உள்ளிட்டவைகள் குறித்து பிரதமர் மோடியுடன் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா, சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

Comment

Successfully posted