இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டியில் இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்கு

Jan 24, 2020 02:40 PM 236

ஆக்லாந்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், இந்திய அணிக்கு 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ அதிரடியாக ஆடிய நிலையில், 19 பந்துகளில் 30 ரன்களை எடுத்திருந்த கப்தில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து, 59 ரன்களில் முன்ரோவும் ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய கிராண்ட்ஹோம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ரன்களை சேர்த்த வில்லியம்சன் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, சிறப்பாக ஆடிய டெய்லர் 54 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது.

Comment

Successfully posted

Super User

I. LOVE. India. super