தீபாவளிப் பண்டிகை - எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய வீரர்கள் கொண்டாட்டம்

Nov 07, 2018 01:44 PM 438

தீபாவளிப் பண்டிகையையொட்டி வாகா எல்லையில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலம் வாகாவில் உள்ள, இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் பகுதியில் இருக்கும் இந்திய வீரர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.

வாகா எல்லையில் உள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு, இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted