4-வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு

Mar 10, 2019 01:50 PM 279

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மொகாலியில் நடைபெறும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக தவான் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வந்த நிலையில், ராஞ்சியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில், ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டுவர் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comment

Successfully posted