ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

May 03, 2019 05:09 PM 214

ஐசிசியின் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது

ஒவ்வொரு வருடமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2016 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் நடந்த போட்டிகளின் முடிவுகளில் 50 சதவீதமும் நடப்பு காலத்தின் போட்டிகள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், இந்தியா 113 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிகிறது. 111 புள்ளிகளுடன் நியூஸிலாந்து 2 வது இடத்திலும், 108 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 3வது இடத்திலும் நீடிக்கிறது. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில், 123 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 121 புள்ளிகளை பெற்ற இந்தியா 2வது இடத்திலும், 115 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க 3வது இடத்திலும் உள்ளன.

Comment

Successfully posted