ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தோல்வி

Jan 11, 2019 06:13 AM 60

ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் 2 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆசிய உலக கோப்பை கால்பந்து போட்டிகள் துபாயில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. ஏ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை        4க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து தனது இரண்டாவது லீக் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் 41 வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் முதல் பாதியில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஐக்கிய அரபு அமீரகம் 88 வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தது. இறுதி வரை கடுமையாக போராடியும் இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

Comment

Successfully posted