ஒருநாள் தொடர் தரவரிசையில், இந்தியா 2வது இடத்தில் நீடிப்பு

Mar 15, 2019 08:37 AM 55

ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒரு நாள் தொடரை இந்தியா இழந்த நிலையில், தரவரிசை பட்டியலில் தொடர்ந்து2வது இடத்தில் நீடிக்கிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா அணி சொந்த மண்ணில் 2 க்கு 3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இந்நிலையில், சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணி ஒரு புள்ளியை இழந்து 120 புள்ளிகளுடன் தொடர்ந்து 2 வது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 112 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அணிகள் ரன் ரேட் அடிப்படையில், நியூசிலாந்து 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 4வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கெதிரான தொடரை வென்ற நிலையில், 100 புள்ளிகளுடன் 6வது இருந்த ஆஸ்திரேலியா 103 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Comment

Successfully posted