இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி

Apr 27, 2021 12:25 PM 507

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 2 ஆயிரத்து 771 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.

தற்போது 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், ஒரு கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.image

இதுவரை 14 கோடியே 52 லட்சத்திற்கு அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted