கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி

Mar 13, 2019 09:16 PM 312

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது

5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்று சம நிலையில் உள்ளன. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், சமி 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோகித் சர்மா 56 ரன்களும், கேதார் ஜாதவ் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் டுகளையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணி தரப்பில் சம்பா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள்  தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

Comment

Successfully posted

Super User

பரவாயில்லை.மணம்தலறவேண்டாம்