உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது

Feb 19, 2019 07:15 AM 277

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன், இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிர்ப்பார்க்காத ஒன்று என குறிப்பிட்ட ஹர்பஜன் சிங், மிகமிக தவறான சம்பவம் என்றும் வேதனை தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்த்து, கோப்பையை வெல்லும் வலிமை இந்திய அணியிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். விளையாட்டு மட்டுமின்றி, பாகிஸ்தான் உடனான அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தேசத்தின் நலனிற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Comment

Successfully posted