13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இந்தியா 17 போட்டிகளில் பங்கேற்பு

Nov 09, 2019 05:58 PM 73

இந்தாண்டு நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா 17 போட்டிகளில் களம் காண உள்ளது.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில், இந்தியா உள்பட 8 நாடுகள் பங்கேற்க உள்ளன. மொத்தம் 27 போட்டிகளில், இந்தியா 17 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், முதன் முதலாக கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா, கிரிக்கெட், கபடி, கோல்ஃப், வில்வித்தை உள்ளிட்ட 10 போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

Comment

Successfully posted