சமூக தொற்றாக மாறாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்!!

Jul 08, 2020 09:35 AM 3538

கொரோனா வைரஸால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், சமூக தொற்றாக மாறாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்தை தாண்டிய நிலையில், ஐந்து லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியா, ரஷ்யா, ஸ்பெயின், பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிந்தாலும், சமூக தொற்றாக மாறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 7 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 6 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் இரண்டரை லட்சம் பேரும், பாகிஸ்தானில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted