ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்துமா இந்தியா? - நாளை முதல் டெஸ்ட்

Dec 05, 2018 01:39 PM 52

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டிகளில் பங்கேற்றது. இந்த டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை துவங்குகிறது.

கடந்த ஆஸ்திரேலிய தொடரில் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 692 ரன்கள் விளாசினார். இந்த முறையும் அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 70 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்பதால் இந்த முறை தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா உள்ளது. வலுவான இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

Comment

Successfully posted