முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸி. இன்று மோதல்

Jan 14, 2020 06:44 AM 1381

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட துணை கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பயிற்சியின் போது, ரோகித் சர்மாவின் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் களமிறங்குவது குறித்து இறுதி நேரத்தில் முடிவு செய்யப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் அண்மை காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் வார்னர், சுமித், லபுஷேன் ஆகியோர் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருப்பார்கள் எனத் தெரிகிறது. ரன் குவிப்பிற்கு சாதகமாக மும்பை வான்கடே மைதானம் இருக்கும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted