முதல் டி20 போட்டி: விராட் கோலி அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி

Dec 06, 2019 10:39 PM 1500

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் தொடர் மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரரான ஹெட்மியர் 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் சஹால் 2 விக்கெட்டும், தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Comment

Successfully posted