இந்திய விமானப்படையின் 60 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

Oct 20, 2019 03:17 PM 102

மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய விமானப்படையினர் செய்த சாகசங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. 

இந்திய விமானப்படையின் கிழக்குப் படைப் பிரிவு மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் 1958ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் படைப்பிரிவு அமைக்கப்பட்டு 60ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அங்கு விழா நடைபெற்றது. அதில் விமானப்படையின் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள், விமானப்படையில் பயன்படுத்தும் குண்டுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பொதுமக்கள் பார்வையிட்டனர். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில் வீரர்கள் பல்வேறு சாகசங்களைச் செய்து காட்டினர்.

Comment

Successfully posted