இந்திய விமானப்படை தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி

Feb 17, 2020 10:49 AM 195

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறையை பலப்படுத்தும் வகையில் நவீன கருவிகள் மற்றும் போர் விமானங்களை வாங்குவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக 56 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் மற்றும் இந்திய விமானப்படை இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நீண்ட ஆலோசனைக்கு பிறகு இந்த தொகை 39 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டு, ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை விரைவில் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த 3 ஆண்டுகளில், தேஜஸ் போர் விமானங்கள் வழங்கப்படும் என ஹெச்.ஏ.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted