மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ராணுவ அலுவலகம் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

Oct 30, 2018 10:12 AM 456

 

 

 

பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள ராணுவ நிர்வாக அலுவலகம் மீது இந்தியா தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் சம்பவம் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், அந்த நாட்டின் எல்லைக்குள் உள்ள பூஞ்ச் ராணுவ அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் ஊடுருவல்களுக்கு இந்திய ராணுத்தின் தரப்பில் தக்க பதிலடி தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு பதிலடி அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted