இந்திய கடலோர காவல் படைக்கு தமிழகத்தை சேர்ந்த புதிய இயக்குநர் நியமனம்

Jun 25, 2019 04:58 PM 94

தமிழகத்தை சேர்ந்த நடராஜனை, இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக நியமித்து, பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடல் வழியான ஊடுருவலை தடுக்கும் வகையில் கடந்த 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்திய கடலோர காவல் படை உருவாக்கப்பட்டது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்த அமைப்பு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது இதன் இயக்குநராக ராஜேந்திர சிங் உள்ளார். இந்த நிலையில் இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக சென்னையை சேர்ந்த நடராஜனை நியமித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இவர் மேற்கு பிராந்தியத்தின் கூடுதல் இயக்குநராக இருந்து வந்தார். இந்திய கடலோர காவல் படை உருவாக்கப்பட்ட பிறகு முதன் முறையாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comment

Successfully posted