இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் வீடு திரும்பினார்

Aug 03, 2018 11:33 AM 481

மூச்சுதிணறல் மற்றும் சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், கடந்த 28ஆம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  மருத்துவமனைக்கு  நேரில் சென்று தா.பாண்டியனிடம் நலம் விசாரித்தனர். இந்தநிலையில், உடல் நலம் தேறியதையடுத்து, சிகிச்சைப் பின்னர்  தா.பாண்டியன் வீடு திரும்பி உள்ளார்.

Related items

Comment

Successfully posted