வீரர்களை தேர்வு செய்வதில் சொதப்புகிறதா இந்திய அணி?

Mar 14, 2019 09:54 AM 796

நடந்த முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இழந்த இந்திய அணி, உலக கோப்பை தொடருக்கு முன் சரியான அணியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி விளையாடியது. தொடரின் முதல் 2 ஆட்டங்களை இந்திய அணி வென்ற பிறகும், தொடரை இந்திய அணி இழந்தது. இதற்கு அணி தேர்வும் காரணம் என்று கருதப்படுகிறது. அதே சமயம், ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி குறைத்து மதிப்பீட்டதும் ஒரு காரணம். வெற்றி, தோல்வி சகஜம் என்ற இருந்தாலும், இந்திய அணி செய்த தவறுகளே இந்த தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணி தேர்வில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாய்ப்புகளை வீண் அடித்த ரிஷப் பண்ட் - விஜய் ஷங்கர்

நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் அதிகம் வாய்ப்பு அளிக்கப்பட்ட பண்ட் - விஜய் ஷங்கர் ஆகியோர் தங்களது வாய்ப்பை எளிதாக தவறவிட்டுள்ளனர். பேட்டிங்கில் நின்று விளையாட வாய்ப்பு கிடைத்தும் தேவையில்லாத ஷாட்கள் ஆடி அவுட் ஆகினர்.

இழுபறியுள்ள 4வது வரிசை வீரர்

இந்திய அணியில் விராட் கோஹ்லி பிறகு எந்த வீரரை இறக்கலாம் என தேர்வு செய்வதில் அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், 4வது வீரராக களமிறக்கப்பட்ட ராயுடு, ராகுல் ஆகியோரும் அண்மை தொடரில் சொதப்பியுள்ளனர். இதனால் உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி 4வது வரிசை வீரரை கண்டறிய கட்டாயத்தில் உள்ளது.

சொதப்பும் இந்திய அணியின் சூழல் கூட்டணி

இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களான குலதீப், சாஹல் ஆகியோரும் தற்போது பந்து வீசும் போது ரன்களை வாரி இறைத்து வருகின்றனர். தொடக்கத்தில் சிறப்பாக வீசிய இவர்கள் தற்போது சொத்துபவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கேப்டன்ஷிப்பில் தடுமாற்றம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், கேப்டன்ஷிப்பில் தடுமாறி வருவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். பந்து வீச்சாளர்களை ரொட்டேட் செய்வதில் கோஹ்லி தவறு செய்வதாக கூறிய அவர், கோஹ்லி நிச்சயம் டோனிடமிருந்து அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்றைய போட்டியின் போது, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் குலதீப் ஓவரை ஆரம்பத்திலிருந்தே தாக்க ஆரம்பித்தனர், இருப்பினும் குலதீப் தொடர்ச்சியாக பந்து வீச அனுமதித்தார் கோஹ்லி.

எது எப்படி இருந்தாலும் இந்திய அணி தவறை, உலக கோப்பைக்கு முன் சரி செய்ய ஆஸ்திரேலிய தொடர் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

Comment

Successfully posted