ஜூலையில் மட்டும் 227 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்கள்

Aug 07, 2019 11:14 AM 434

ஜூலை மாதத்தின் 31 நாட்கள் காலக்கட்டத்தில் தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், பாரா-துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 9 விளையாட்டுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக 227 பதக்கங்களை வென்று குவித்துள்ளனர். 6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தோனேஷியாவில் நடை பெற்ற பிரஸிடன்ட் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் துருக்கியில் நடைபெற்ற போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வென்று அசத்தினார். மேலும் ஜூடோவில் தபாபி தேவி, பளு தூக்குதலில் மீரா பாய் சானு, துப்பாக்கி சுடுதலில் தமிழக வீரர் இளவேனில் வாளரிவன், மெஹூலி கோஷ் ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் சாதித்துள்ளனர். மொத்தம் வெல்லப்பட்ட 227 பதக்கங்களில் அதிகபட்சமாக 71 பதக்கங்கள் தடகளத்தில் மட்டும் கிடைத்துள்ளன. சமாவோ நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இந்தியா 35 பதக்கங்களை அள்ளியது. அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது இந்திய விளையாட்டுத் துறைக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது.

Comment

Successfully posted